ஈரோடு:கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் ஊராட்சி தண்டு மாரியம்மன் கோயில் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் உள்ள கிணற்றில் வியாழன் அன்று சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் சடலம் கிடப்பதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற பங்களாப்புதூர் போலீசார் கிணற்றில் சாக்கு மூட்டையில் சடலமாக கிடந்த பெண் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கிணற்றில் சாக்கு மூட்டையில் கால் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண் கோபி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவி என்பது தெரியவந்தது.
கடந்த மாதம் 28-ஆம் கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தேடிப் பார்த்த நிலையில் கோபி காவல் நிலையத்தில் தன் மகளைக் காணவில்லை என புகார் அளித்திருந்தனர். பின்னர் கிணற்றில் கிடந்த சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காகப் பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து கல்லூரி மாணவியைக் கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசியது யார் என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில் "கல்லூரி மாணவி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த லோகேஷ் ஆகியோர் காதலித்து வந்ததாக தெரிகிறது. கடந்த ஆண்டு லோகேஷ் எம்.எஸ்.சி 2 ஆண்டு முடித்துவிட்டு கரட்டடி பாளையம் பகுதியில் டேட்டா என்ட்ரி வேலை செய்து வந்துள்ளார்.