தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பார்வையிழந்தோருக்கான கைப்பந்து போட்டி: ஈரோடு அணி வெற்றி! - ஈரோடு மாவட்ட செய்திகள்

ஈரோடு: சென்னிமலையில் நடைபெற்ற பார்வையற்றவர்களுக்கான மாநில அளவிலான கைப்பந்துப் போட்டியில் வெற்றிபெற்ற ஈரோடு மாவட்ட அணிக்கு முதல் பரிசுக்கான கோப்பையும் சான்றிதழ்களும் ரொக்கப்பரிசுகளும் வழங்கப்பட்டன.

blind volley ball
blind volley ball

By

Published : Jan 26, 2020, 4:39 PM IST

தனியார் கல்லூரி மற்றும் பார்வையற்றோர் நற்பணி இயக்கம் ஆகியவற்றின் சார்பில் பார்வையற்றவர்களுக்கான மாநில அளவிலான கைப்பந்துப் போட்டி ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் நடைபெற்றது.

இந்தக் கைப்பந்து போட்டியில் ஈரோடு, சென்னை, கரூர், தஞ்சாவூர், வேலூர், ஊட்டி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 15-க்கும் மேற்பட்ட அணிகளில் 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

தகுதிச்சுற்று, கால் இறுதி, அரை இறுதிப் போட்டிகளில் வெற்றிபெற்ற அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி இன்று மாலை நடைபெற்றது. இறுதிப் போட்டியில் ஈரோடு - தஞ்சாவூர் அணிகள் மோதின. கைப்பந்து போட்டியைக் காணவந்த பார்வையாளர்கள் போட்டியாளர்களைக் கைதட்டி உற்சாகப்படுத்தினர். இதில், ஈரோடு அணி அதிக புள்ளிகளைப் பெற்று முதல் பரிசினையும், தஞ்சாவூர் அணியினர் இரண்டாவது பரிசினையும் பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் முதல் பரிசு பெற்ற ஈரோடு மாவட்ட அணியினைச் சேர்ந்த வீரர்களுக்கு பரிசுக் கோப்பைகளும், சான்றிதழ்களும் ரொக்கப்பரிசுகளும் வழங்கப்பட்டன. அதேபோல் இரண்டாம் பரிசினைப் பெற்ற தஞ்சாவூர் அணியினருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், கைப்பந்து போட்டியில் தங்களது திறமையை வெளிப்படுத்திய வீரர்களுக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.

பார்வையிழந்தோர் விளையாடும் கைப்பந்து போட்டி

தன்னம்பிக்கையை வளர்த்திடும் வகையிலும் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகள் தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும், இதுபோன்ற போட்டிகள் மாவட்டந்தோறும் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் எனப் பார்வையற்ற விளையாட்டு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

போராடும்போது அகிம்சை வழியை பின்பற்ற வேண்டும் - குடியரசுத் தலைவர் அறிவுரை

ABOUT THE AUTHOR

...view details