ஈரோடு மாவட்டம் கோபி அருகே கவுந்தம்பாடியில் ஹெர்போ கேர் மருத்துவமனை உரிமையாளர் மகன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
திருமணவிழாவில் கலந்துகொள்ள வந்த திருமாவுக்கு பாஜகவினர் எதிர்ப்பு...ஈரோட்டில் பரபரப்பு! - ஈரோட்டில் விசிகவினருக்கு பாஜக எதிர்ப்பு
கோபி அருகேயுள்ள கவுந்தம்பாடியில் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சென்ற திருமாவளவனுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் முழக்கங்கள் எழுப்பியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருமாவளவனுக்கு எதிர்ப்பு...ஈரோட்டில் விசிகவினர் வாகனங்கள் மீது கல்வீச்சு
இதனால், விசிகவினருக்கும், பாஜகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மோதல் உருவாகும் சூழ்நிலையில், அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இருதரப்பினரும் கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க:திருமா மீது பொய் பரப்புரை செய்யும் பாஜக - ஜவாஹிருல்லா
Last Updated : Oct 26, 2020, 3:20 PM IST