ஈரோடு: மொடக்குறிச்சி பேரூராட்சியில் திமுகவைச் சேர்ந்த பத்து கவுன்சிலர்களும், பாஜகவைச் சேர்ந்த இரண்டு கவுன்சிலர்களும், அதிமுகவைச் சேர்ந்த ஒரு கவுன்சிலரும் என 15 நபர்கள் உள்ளனர். பேரூராட்சி தலைவராக திமுகவைச் சேர்ந்த பேரூர் செயலாளர் சரவணன் என்பவரின் மனைவி செல்வாம்பால் உள்ளார்.
இந்த நிலையில் பேரூராட்சியில் தொடர் நிதி முறைகேடு நடப்பதாக பாஜகவைச் சேர்ந்த கவுன்சிலர்கள் குற்றம் சாட்டி வந்தனர். நேற்று முன்தினம் (நவ. 23) மொடக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாஜக சார்பில் பேரூராட்சி நிதி முறைகேடு தொடர்பாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
இதனைத் தொடர்ந்து பேரூராட்சி தலைவர் செல்வாம்பால், அவரது கணவர் சரவணன் உள்ளிட்டோர் பாஜக கவுன்சிலர் சத்யாவின் கணவர் சிவசங்கரை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.