தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீர் மேலாண்மையை இந்த அரசு சரியாக செய்யவில்லை - பாஜக விவசாய அணித் தலைவர்

கீழ்பவானி கால்வாயில் நான்காவது முறை உடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நீர் மேலாண்மையை இந்த அரசு சரியாக செய்யவில்லை, என பாஜக விவசாய அணித் தலைவர் நாகராஜ் தெரிவித்துள்ளார்.

நீர்மேலாண்மையை இந்த அரசு சரியாக செய்யவில்லை
நீர்மேலாண்மையை இந்த அரசு சரியாக செய்யவில்லை

By

Published : Dec 14, 2022, 4:09 PM IST

Updated : Dec 14, 2022, 4:48 PM IST

ஈரோடு: பெருந்துறை அருகே கீழ்பவானி கால்வாய் உடைப்பை பாஜக மாநில விவசாய அணித்தலைவர் ஜி.கே.நாகராஜ் மற்றும் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி ஆகியோர் பார்வையிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாகராஜ் கூறியதாவது, ”கீழ்பவானி வாய்க்கால் தொடர்ச்சியாக சமீப காலத்தில் 4 முறை உடைந்திருப்பது திட்டமிட்ட சதி என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாஜக ஆய்வு செய்து கால்வாயைத் தூர்வார வேண்டும் என கூறியதால் இந்த அரசு தூர்வாரியது. இதனால், கடைமடை வரை 6 நாட்களில் தண்ணீர் சென்றது. தற்போது உடைப்பு ஏற்பட்டப் பகுதியில் 5 நாட்களாக தண்ணீர் கசிந்து கொண்டிருந்ததை கவனிக்காமல், சரியாகப் பராமரிக்காதது தான் இத்தகைய பெரும் உடைப்பிற்குக் காரணம்.

முறையாக கால்வாயை இந்த அரசு தூர்வாரவில்லை. நீர் மேலாண்மையை இந்த அரசு சரியாக செய்யவில்லை. இந்த அரசு கமிஷனுக்காக கான்கிரீட் போடுவதில் தான் குறிக்கோளாக உள்ளது. ஆட்சியில் இல்லாத போது கான்கிரீட் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள், தற்போது ஆட்சிக்கு வந்தவுடன் 710 கோடி ரூபாய்க்கு ஆசைப்பட்டு கான்கிரீட் திட்டத்தை செயல்படுத்த முயற்சிக்கிறார்கள்.

இந்த உடைப்பில் சதி இருக்கிறது என நம்புகிறோம். இது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இந்த அரசின் மீது நம்பிக்கை இல்லை. அவினாசி - அத்திகடவு திட்டத்தில் 99% முடிந்த நிலையில், தற்போது துரைமுருகன் தவறான தகவல்களை தெரிவித்து வருகிறார். ஏற்கெனவே பாஜக போராட்டம் நடத்தியபோது அமைச்சர் முத்துசாமி பேச்சுவார்த்தை நடத்தி திட்டத்தை விரைந்து முடிப்பதாக உறுதியளித்தார். அவர் கூறிய படி ஜனவரி 15-க்குள் திட்டத்தை முடிக்காவிட்டால், மிகப்பெரிய போராட்டத்தை இந்த அரசு சந்திக்க வேண்டியிருக்கும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு கல்தா? தமிழக பாஜகவின் பலே திட்டம்!

Last Updated : Dec 14, 2022, 4:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details