தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டை துண்டாடும் எதிர்க்கட்சிகள்: பேரணியாக சென்று ஆட்சியரிடம் பாஜக மனு!

ஈரோடு: தமிழ்நாட்டு மக்களிடையே பிரிவினையைத் தூண்டும் விதத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் திமுக உள்ளிட்ட எதிர் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜகவினர் ஈரோடு ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை வழங்கினர்.

caa support bjb
caa support bjb

By

Published : Feb 28, 2020, 7:24 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடி வன்முறையைத் தூண்டுவோர் மீது நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் பாஜகவினர் ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சியர்களிடம் கோரிக்கை மனுக்களை வழங்கி வருகின்றனர். அந்த வகையில், ஈரோடு மாவட்ட பாஜக சார்பில் கோரிக்கை பேரணி ஈரோட்டில் இன்று நடைபெற்றது.

கட்சியின் தேசிய இளைஞர் அணி துணைத் தலைவர் ஏ.பி.முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற பேரணியில் அக்கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

ஆட்சியரிடம் மனு கொடுக்க சென்ற பாஜகவினர்

பின்னர், முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக போராடி வரும் திமுக உள்ளிட்ட அதன் கூட்டணிக் கட்சியினர் சட்டம் குறித்த தவறான புரிதல்களை மக்களிடம் பரப்புரை செய்து வருகின்றனர். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடுபவர்கள், மத்திய அரசின் திட்டங்களை விமர்சித்து கலவரத்தையும், வன்முறையையும் தூண்டும் வகையில் பேசி வருகின்றனர், அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்" என்றார்.

இதையும் படிங்க: ஈரானில் கொரோனா: தமிழ்நாடு மீனவர்களை மீட்கக்கோரி மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!

ABOUT THE AUTHOR

...view details