ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கோட்டுவீராம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல்ரகுமான் (24). பால்பூத் ஒன்றில் பணிபுரிந்துவரும் இவர், தனது இருசக்கரவாகனத்தில் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு உறவினரின் குழந்தையைப் பார்க்கச் சென்றுள்ளார். அதன்பின் வீடு திரும்பிய அவர், சத்தியமங்கலம் அத்தாணி சாலை வடக்குப்பேட்டை அருகே சென்றுகொண்டிருந்தபோது அவ்வழியே வந்த லாரி மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
சத்தியமங்கலம் அருகே பைக் மீது லாரி மோதி விபத்து: இளைஞர் உயிரிழப்பு - சத்தியமங்கலம் அருகே லாரி பைக் மோதி விபத்து
ஈரோடு: சத்தியமங்கலம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.
erode
அதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எதிர்பாராத விதமாக அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். தகவலறிந்த சத்தியங்கலம் காவல் துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க:அறுவடை செய்யும் வாகனம் கவிழ்ந்து விபத்து - இரண்டு பேர் படுகாயம்