தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்வு - மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! - Bawanisagar dam rise

ஈரோடு: நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 99 அடியாக உயர்ந்துள்ளது. இன்னும் 3 அடி நீர்மட்டம் உயர்ந்து 102 அடியாக எட்டும்போது வெள்ளநீர் வெளியேற்றப்படும் என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

Bhawanisagar Dam 99 feet high, பவானிசாகர் அணை 99அடியாக உயர்வு

By

Published : Oct 19, 2019, 11:41 AM IST

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்ட உயரம் 105 அடி, நீர் இருப்பு 32.8 டிஎம்சியாக உள்ளது. தெங்குமரஹாடா மாயாறும், மேட்டுப்பாளையம் பவானி ஆறும் முக்கிய நீர்வரத்தாக உள்ளன. நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் கனமழையால் பில்லூர் அணை முழுகொள்ளளவை எட்டியுள்ளது.

அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே அணையில் இருந்து மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுக்கு திறந்துவிடப்பட்டது. தெங்குமரஹாடா பகுதியில் பெய்யும் மழைநீரும், பில்லூர் அணையின் உபரி நீரும் பவானிசாகர் அணையில் கலப்பதால் அணையின் நீர்வரத்து 99 அடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்து 102 அடியை எட்டும்போது வெள்ளநீர் வெளியேற்றப்படும் என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

பவானிசாகர் அணை நீர்மட்டம் 99 அடியாக உயர்வு

மேலும், அணையை ஒட்டியுள்ள சித்தன்குட்டை, அய்யம்பாளையம், சுஜ்ஜல்குட்டை ஆகிய கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நீர் வரத்து அதிகமாகி வருவதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் மீன்பிடி படகுகள் கரையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: காவிரி ஆற்றில் 20,500 கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு!

ABOUT THE AUTHOR

...view details