ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகர் அணை நீர்மட்டம் 105 அடியாகவும் நீர் இருப்பு 32.8 டிஎம்சியாகவும் உள்ளது. பவானிசாகர் அணையினால், கீழ்பவானியில் சுமார் ஒரு லட்சத்து மூவாயிரத்து ஐநூறு ஏக்கர் நிலமும், தடப்பள்ளி, அரக்கன் கோட்டை பகுதியில் 40 ஆயிரம் ஏக்கரும் பயன்பெறுகின்றனர்.
இந்தாண்டு முதல்போக பாசனத்திற்கு ஆகஸ்ட் 14ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது, கோபி பகுதியில் பலத்த மழை பெய்வதால் நெல் சாகுபடிக்கு தேவையான தண்ணீர் மழை நீரால் கிடைப்பதால் அணையில் இருந்து திறக்கப்படும் நீரை நிறுத்துமாறு விவசாயிகள் பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு கோரிக்கை விடுத்தனர்.