சத்தியமங்கலம் அடுத்த கீழ்பவானிசாகர் அணையில் இருந்து ஒரு லட்சத்து 3,500 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஆண்டு அணையில் நீர் இருப்பு முழுகொள்ளளவை எட்டியதால் கடந்த ஆகஸ்ட ஆறாம் தேதி கீழ்பவானி வாய்க்கால் நெல் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
மொத்தம் 120 நாள்களுக்கு தண்ணீர் திறப்பு நீடிக்கும். இதன் மூலம் கருர், திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 124 கிளை வாய்க்கால் மூலம் பாசன வசதி பெறுகின்றனர். முதல் போக நெல் பயிருக்கு 24 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த கெடு நேற்றுடன் முடிவடைந்துள்ளதால் பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கீழ்பவானி வாய்க்கால் ஒற்றைப்படை மதகுகளில் உள்ள ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் நிலக்கடலை, எள் பயிரிட புன்செய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க மாவட்ட நிர்வாகம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.