தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

18 நாட்களாக ஒரே நீர்மட்டத்தில் நீடிக்கும் பவானிசாகர் அணை! - சம அளவு

ஈரோடு: நீர்வரத்து மற்றும் பாசனத்திற்கு நீர்திறப்பு சம அளவில் உள்ளதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கடந்த 18 நாட்களாக 94 அடியிலேயே நீடித்துவருகிறது.

bhavanisagar dam

By

Published : Sep 3, 2019, 3:50 PM IST

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில் அணையின் நீர்மட்டம் 63 அடியாக இருந்ததால் பாசனத்திற்கான தண்ணீர் திறப்பதற்கு சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து 94 அடியை எட்டியது. இதையடுத்து அணையில் போதிய நீர் இருப்பு உள்ளதால் பாசனத்திற்கு நீர் திறக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டதைத் தொடர்ந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காளிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கு கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதியும், கீழ்பவானி பிரதான வாய்க்கால் பாசனத்திற்கு கடந்த 16ஆம் தேதியும் தண்ணீர் திறக்கப்பட்டது.

ஒரே நீர்மட்டத்தில் நீடிக்கும் பவானிசாகர் அணை!

இதன் காரணமாக அணையிலிருந்து அதிகபட்சமாக 1350 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 2300 கன அடி நீரும் என மொத்தம் 3650 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் அணைக்கு நீர்வரத்தும், பாசனத்திற்கு நீர் திறப்பும் சமமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் கடந்த 18 நாட்களாக 94 அடியிலிருந்து குறையாமல் அதே நிலையில் நீடிக்கிறது. இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 93.90 கன அடியாகவும், நீர் இருப்பு 24.2 டிஎம்சியாகவும் உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details