ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும் 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட அணையாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 இலட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில், பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 96 அடியாக உயர்வு!
ஈரோடு: பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பரவலாக மழைபெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் 96 அடியை எட்டியுள்ளது.
bhavanisagar Dam
அணையின் நீர்மட்டம் கடந்த மூன்று நாட்களில் 2 அடி உயர்ந்து 96 அடியை எட்டியுள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 96.02 அடியாகவும் நீர் இருப்பு 25.7 டிஎம்சியாகவும் உள்ளது. அணையிலிருந்து பாசனத்திற்காக பவானி ஆற்றில் 1350 கனஅடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 2,300 கனஅடி நீரும் என மொத்தம் 3650 கனஅடி நீர் வெளியேற்றப் படுகிறது.