தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு! - Bhavanisagar dam

ஈரோடு: பில்லூர் அணையில் இருந்து நீர்மின் உற்பத்திக்காக பவானி ஆற்றில் நீர் திறக்கப்பட்டுள்ளதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

bhavanisagar-dam

By

Published : May 22, 2019, 12:16 PM IST

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள இரண்டு லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

சில மாதங்களாக அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடுமையான வறட்சி ஏற்பட்டதால் அணைக்கு நீர்வரத்து வெகுவாகக் குறைந்தது.

இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து கடந்த சில நாள்களாக 150 கன அடி முதல் 250 கனஅடி வரை இருந்த நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள பில்லூர் அணையில் நீர் மின் உற்பத்திக்காக பவானி ஆற்றில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து நேற்று 342 கனஅடியாக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 886 கனஅடியாக அதிகரித்துள்ளது.

இது குறித்து பொதுப்பணித் துறை அலுவலர்களிடம் கேட்டபோது, 'நீலகிரி மாவட்டத்தில் உள்ள நீர்மின் அணைகள் மின் உற்பத்திக்காக நீர் திறப்பு அதிகரிக்கும்போது பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது' எனத் தெரிவித்தனர். இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 53.03 அடியாகவும், அணையில் நீர் இருப்பு 5.2 டிஎம்சியாகவும் உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் வினாடிக்கு 200 கனஅடி வீதம் வெளியேற்றப்படுகிறது.

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ABOUT THE AUTHOR

...view details