ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள இரண்டு லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த ஜூன் மாதம் பெய்ய வேண்டிய பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால் அணையில் நீர் இருப்பு குறைவாகவே இருந்தது.
இந்த நிலையில், கடந்த 5ஆம் தேதி முதல் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி, வட கேரளாவில் பலத்த மழை பெய்துவருகிறது. தொடர்மழை காரணமாக பவானி ஆறு, மாயாற்றில் வௌ்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.