ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி நீர்மட்ட உயரம் கொண்டது. பவானிசாகர் அணை மூலம் 2 லட்சத்து 7 ஆயிரம் கீழ்பவானி வாய்க்கால்கள் பாசன வசதி பெறுகின்றன.
பவானிசாகர் அணையின் நீர்வரத்து 2ஆயிரத்து 667 கனஅடியாக இருந்த நிலையில் தற்போது நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக 6 ஆயிரத்து 278 கனஅடி அதிகரித்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் தொடர் மழை காரணமாக மாயாறும், பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இன்று (ஜூன் 16) காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 89.08 அடியாக உள்ளது.
கோடை வெயிலால் வறண்டுபோன வனப்பகுதிகள் தற்போது பெய்த மழையால் துளிர் விட ஆரம்பித்துள்ளன. மேலும், கனமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க:பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்க அணையில் பழுதடைந்த ஷட்டர்கள் சரிபார்ப்பு