முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா ஈரோட்டில் சதுமுகையில்கொண்டாடப்பட்டது. விழாவின் தொடக்கத்தில் பவானிசாகர் எம்எல்ஏ., ஈஸ்வரன் தலைமையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டதால் அதிமுக தொண்டர்கள் ஆர்வமாக காத்துக்கொண்டிருந்தனர். மேடைக்கு கீழே பவானிசாகர் எம்எல்ஏ ஈஸ்வரன் முன்வரிசையில் அமர்ந்திருந்தார்.
இந்நிலையில், விழாவிற்கு வருகை தந்த அமைச்சரை எம்எல்ஏ வரவேற்காமல் கீழே உட்கார்ந்திருந்தார். மேடைக்கு சென்றதும் இதை கவனித்த அமைச்சர், கீழே இருந்த எம்எல்ஏ ஈஸ்வரனை கை அசைத்து மேடைக்கு வருமாறு அழைத்தார். இருப்பினும் எம்எல்ஏ வர மறுத்தபோது அவரை கட்சித் தொண்டர்கள் வற்புறுத்தி மேடைக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது, தனக்கு அருகில் அமருமாறு அமைச்சர் கூறியும், ஈஸ்வரன் ஒரு இருக்கை தாண்டி அமர்ந்தார். இச்சம்பவத்தினால், அமைச்சருக்கும் எம்எல்ஏவுக்கும் இருந்த பனிப்போர் வெளிச்சத்து வந்தது.
இதையும் படிங்க:அவைத்தலைவர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம் தொடக்கம்