ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக பவானிசாகர் அணை உள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்ட உயரம் 105 அடி ஆகும். தற்போது நீர் இருப்பு 32.8 டிஎம்சியாக உள்ளது.
பவானிசாகர் அணை மூலம், இரண்டு லட்சத்து ஏழாயிரம் வாய்க்கால்கள் மூலம் கீழ்பவானி வாய்க்கால்கள் பாசன வசதி பெறுகின்றன. நேற்றைய (ஜூன் 16) நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து நான்காயிரத்து 611 கனஅடியாக இருந்தது.
பவானி சாகர் அணையில் மெள்ள, மெள்ள அதிகரிக்கத் தொடங்கும் நீர்வரத்து இந்நிலையில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி, நடுவட்டம், மேல் பவானி ஆகிய வனப்பகுதிகளில் பெய்த மழையால் பில்லூர் நீர்தேக்கம் முழுக் கொள்ளளவை எட்டியது.
உபரி நீரைத் தேக்கிவைக்க முடியாத காரணத்தால் வினாடிக்கு 13 ஆயிரத்து 500 கனஅடி உபரி நீரானது பவானி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் அணையின் நீர்மட்டம் ஒரேநாளில் ஓரடி உயர்ந்து, 90 அடியை எட்டியுள்ளது. இன்று (ஜூன் 17) காலை நிலவரப்படி அணையின் நீர் இருப்பு 21.59 டிஎம்சியாக உள்ளது. இதே நிலை நீடித்தால் அணை வேகமாக நிரம்பும் என பொதுப்பணித் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : நீலகிரியில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு