தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவசாயியின் முகத்தை சிதைத்த கரடி! - kovai

கோவை: சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் பவளக்குட்டையில் கரடி தாக்கியதில் விவசாயியின் முகம் சிதைந்து கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

bear attack

By

Published : Aug 6, 2019, 12:14 PM IST

சத்தியமங்கலம் அடுத்த பவளக்குட்டையைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் பரப்பட்டாவில் உள்ள தனது தோட்டத்துக்கு விவசாயப் பணிக்காக நடந்து சென்றுகொண்டிருந்த-போது புதர்மறைவிலிருந்த கரடி திடீரென அவர் மீது பாய்ந்து சரமாரியாக தாக்கத் தொடங்கியது.

இந்தத் தாக்குதலில் வலி தாங்கமுடியாமல் ஆறுமுகம் அலறியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியினர் திரண்டுவந்தனர். இதையடுத்து, கரடி அங்கிருந்து தப்பியோடியது.

கரடி தாக்கி விவசாயியின் முகம் சிதைந்தது

இதில், முகம் சிதைந்த நிலையில் பலத்த காயமடைந்த ஆறுமுகம் 108 அவசர ஊர்தியில் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

பவளக்குட்டை கிராமத்தையொட்டி இச்சம்பவம் நடந்துள்ளதால் கிராம மக்கள் கரடி மீண்டும் ஊருக்குள் வராதபடி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details