ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பகுதி கடம்பூர் மலைக்கிராமத்தில் கரடியிடம் கிராமவாசி சிக்கிக்கொண்டார். இது பற்றி தகவலறிந்து அங்கு வந்த கிராம மக்கள் கரடியிடம் சிக்கிக்கொண்டவரை மீட்க முயற்சி மேற்கொண்டனர். ஆனால் கரடி அவரை தனது கால்களுக்கு இடையே பிடித்துக் கொண்டு தொடர்ந்து தாக்கியது. இறுதியாக அவரது முகத்தை கரடி சிதைத்தது. கடைசி நேரத்தில் துப்பாக்கி சப்தம் கேட்டு கரடி அவரை விட்டுச் சென்றது.
கரடியிடம் சிக்கிய கிராமவாசி - தாக்குதல்
ஈரோடு: மலைக்கிராம வாசி ஒருவர் கரடியிடம் சிக்கிக் கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
bear
இதை அங்கிருந்த ஒருவர் தனது சொல்போனில் படம் பிடித்து வாட்ஸ்அப்பில் பதிவுசெய்துள்ளார். இந்தக் காட்சி 'கடம்பூர்' என குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. இது குறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் இயக்குநர் அருண்லாலிடம் கேட்டபோது இது போன்ற சம்பவம் சத்தியமங்கலத்தில் நடக்கவில்லை என மறுத்துள்ளார்.