தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆடி அமாவாசை: பவானிசாகர் அணைப் பூங்கா மூடல்

ஆடி அமாவாசையை முன்னிட்டு, பவானிசாகர் அணை பூங்காவிற்கு ஆயிரக்கணக்கான மக்கள் வர வாய்ப்புள்ளதால், பூங்காவை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

bavanisagar
பவானிசாகர்

By

Published : Aug 8, 2021, 5:43 PM IST

ஈரோடு மாவட்டத்தில் கரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால், நோய் பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி, ஆடி அமாவாசை நாளான இன்று (ஆகஸ்ட்.08) பவானிசாகர் அணை பூங்காவிற்கு ஆயிரக்கணக்கான மக்கள் வர வாய்ப்புள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூங்காவை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதன்பேரில், பொதுப்பணித் துறை அலுவலர்கள் அணை பூங்காவை மூடினர்.

சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், பவானிசாகர் அணை பகுதி மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. அணைப் பூங்காவில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும், அணை பூங்கா முன்பு இன்று மீன் விற்பனைக் கடைகள் செயல்பட பவானிசாகர் பேரூராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கரோனா தடுப்பு நடவடிக்கை: கொடிவேரி அணையில் போலீசார் குவிப்பு

ABOUT THE AUTHOR

...view details