ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அக்.13ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் அணையின் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.
பவானிசாகர் அணையில் நாளை முதல் 105 அடி நீர் தேக்க திட்டம்! - 105 அடி கொள்ளளவு நீர் தேக்கப்படும்
ஈரோடு: பவானிசாகர் அணையில் நாளை முதல் 105 அடி நீர் தேக்கி வைக்க திட்டமிட்டுள்ளதால் இன்றிரவு 12 மணி முதல் உபரி நீர் வெளியேற்றப்படுவது நிறுத்தப்படும் என பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால், 96 அடியாக இருந்த நீர்மட்டம் அக்டோபர் 22ஆம் தேதி 102 அடியை எட்டியது. 105 அடி உயரம் கொண்ட பவானிசாகர் அணையில் அக்டோபர் மாத இறுதி வரை 102 அடி வரை மட்டுமே நீர் தேக்கமுடியும் என்ற விதிமுறை உள்ளது. எனவே, அணைக்கு வரும் நீர்வரத்தான 5 ஆயிரத்து 885 கன அடி நீர் அப்படியே உபரியாக வெளியேற்றப்படுகிறது. இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 101.99 அடியாகவும், நீர் இருப்பு 30.3 டிஎம்சியாகவும் உள்ளது.
நவம்பர் 1ஆம் தேதி முதல் அணையில் 105 அடிவரை நீர் தேக்கிக்கொள்ளலாம், என்பதால் இன்றிரவு 12 மணி முதல் பவானி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றப்படுவது நிறுத்தப்படும் என்றும் நீர்வரத்தை பொறுத்து அணையில் 105 அடி வரை நீர் தேக்கப்படும் எனவும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.