ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரம் பகுதியில் சரக்கு வேன்கள் நிறுத்துமிடத்தில், சரக்கு வாகனங்கள் ஒட்டுமொத்தமாக வாடகைக்கு இயக்கப்பட்டு வருகின்றது. இதனிடையே, நேற்றிரவு (ஜூலை 6) வாகன நிறுத்தப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் பேட்டரிகள் திருடப்பட்டிருப்பதாக வாகன ஓட்டுநர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.
நேற்று மாலை அப்பகுதியில் முகக் கவசம் அணிந்த மூன்று பேர் சந்தேகிக்கும்படி சரக்கு வாகனங்களில் பேட்டரிகளை எடுக்கும் முயற்சியிலிருந்ததை ஓட்டுநர்கள் சிலர் கண்டறிந்தனர். இதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த வாகன ஓட்டுநர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஒட்டுமொத்தமாகக் கூடிய ஓட்டுநர்கள் பேட்டரி திருடர்களை மடக்கிப் பிடித்து தர்ம அடித்து கொடுத்தனர். பின்னர் அவர்களிடம் விசாரித்த போது வாய் திறக்காமல் மவுனம் சாதித்தனர். இதையடுத்து, மூவரையும் வீரப்பன்சத்திரம் காவல்துறையினர் வசம் ஒப்படைத்தனர். பேட்டரி திருடர்கள் மூவரையும் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் மூவரும் ஈரோடு அசோகபுரத்தைச் சேர்ந்த மனோகரன், சதீஷ்குமார் மற்றும் மனோகரன் என்பதும், மூவரும் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பேட்டரி திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
பேட்டரி திருடும் திருடர்கள் மூவரிடமிருந்தும் 10க்கும் மேற்பட்ட வாகன பேட்டரிகளைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனிடையே நேற்றிரவு அதே வீரப்பன்சத்திரம் பகுதியில் பிடிப்பட்ட மூவரில் இரண்டு பேர் வாகனப் பேட்டரிகளைத் திருடிக்கொண்டு வேகமாக நடந்துச் செல்லும் காட்சி அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க:செயல்பாட்டில் உள்ள இணையதளங்களை நெறிப்படுத்த வேண்டும் - திருமாவளவன்