ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோயில் பிரசித்த பெற்ற கோயில் என்பதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, அம்மனை வழிபடுகின்றனர். இந்த மாதம் (பிப்ரவரி) கோயிலில் ஆங்காங்கே வைக்கப்பட்ட உண்டியலில், காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
பக்தர்கள் செலுத்தும் காணிக்கை மாதந்தோறும் எண்ணுவதால், இந்த மாத உண்டியல் எண்ணும் பணி நேற்று தொடங்கியது. பண்ணாரி அம்மன் கோயில் துணை ஆணையர் சபர்மதி, திருப்பூர் மாவட்ட உதவி ஆணையர் வெங்கடேஷ், கோயில் அறங்காவலர்கள் முன்னிலையில் 20 உண்டியல்கள் நேற்று எண்ணப்பட்டன.