தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நேந்திரம் வாழை விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை - banana price low

ஈரோடு: சத்தியமங்கலம் பகுதியில் நேந்திரம் வாழை விலை கிலோ ரூ.40 இல் இருந்து ரூ.12 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

banana rate dull in erode sathyamangalam
banana rate dull in erode sathyamangalam

By

Published : Nov 22, 2020, 6:47 AM IST

சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளான பவானிசாகர், தொட்டம்பாளையம், பெரியகொடிவேரி, செண்பகபுதூர், புதுப்பீர்கடவு, அரசூர், பெரியூர், கெம்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பகுதிகளில் 35 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் வாழை பயிரிடப்படுகிறது.

தாளவாடி பகுதியில் நேந்திரம் ரகம் வாழை சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டினர். 12 மாத பயிரான நேந்திரம் வாழைக்கு நடவு, உரம்,களையெடுத்தல் மற்றும் வெட்டுக்கூலி என கிலோ ரூ.15 வரை செலவாகும் நிலையில், தற்போது கிலோ ரூ.12க்கு விற்கப்படுவதால் கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

அதேபோல ஜி9 ரக வாழை நாற்று ஒன்று ரூ.17 செலவும் அதனை நடவுக்கு ரூ.3 என மொத்த உற்பத்தி செலவு கிலோ ரூ.100 ஆகிறது. ஆனால் தற்போது ஜி9 விலை கிலோ ரூ.50 ஆக விற்கப்படுவதால் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

குளிர்காலம் என்பதால் கேரளாவில் வாழைப்பழம் விற்பனை மந்தமாக உள்ளதாகவும், சென்னையில் தேன்வாழை அதிக விற்பனையான நிலையில் மழையால் அங்கு விற்பனை சரிவு காரணமாக விலை கிடைக்கவில்லை என வியாபாரிகள் தெரிவித்தனர்.

சத்தியமங்கலம் விவசாயிகள் அறுவடை செய்த வாழைகளை சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் நடைபெறும் ஏலத்திற்கு விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.

நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் 3100 வாழைத்தார்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். அங்கு குறைந்தளவு வியாபாரிகள் வந்த நிலையில் நேந்திரம் ரகம் கிலோ ரூ.12க்கும், கதலி கிலோ ரூ.37க்கும், செவ்வாழை தார் ஒன்றுக்கு ரூ.450க்கும், பூவன் ரூ.350க்கும், ஆந்திர ரஸ்தாளி ரூ.450க்கும், தேன்வாழை ரூ.420க்கும், ரொபஸ்டா ரூ. 200க்கும், மொந்தன் ரூ.230க்கும், பச்சை நாடன் ரூ.250க்கும் ஏலம் போனது. மொத்தம் 3160 வாழைத்தார்கள் ரூ.4.50 லட்சத்திற்கு விற்பனையானது.

வாழைத்தார்கள் விலை கடந்த நாள்களைவிட பாதியாக குறைந்ததாகவும் விலை குறையும்போது இருப்பு வைத்து விற்பனை செய்ய குளிர்பதனிடும் கிடங்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:பேரவைத் தேர்தல் மட்டுமல்ல, எதிர்காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி தொடரும் - அதிமுக அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details