ஈரோடு:சத்தியமங்கலம் அடுத்துள்ள கெம்பநாயக்கன்பாளையத்தில் பாலதண்டாயுதபாணி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் சுயம்வரா பார்வதி யாகம் நடைபெறுவது வழக்கம்.
கரோனா காரணமாக 2 ஆண்டுகளாக திருவிழா நடைபெறாமல் இருந்த நிலையில் இன்று சுயம்வரா பார்வதி யாகம் நடைபெற்றது. கணபதி பூஜையுடன் தொடங்கிய யாக குண்டம் நிகழ்ச்சியில் தீக்குண்டம் வார்க்கப்பட்டு வேத விற்பனர்கள் மந்திரம் ஓதினர்.
முருகர் ஹோமம், அம்மை அழைத்தல், குல தெய்வ அழைப்பு, முன்னோர்கள் அழைப்பு ஆகியவை நடந்தது. நவக்கிரக தோஷம், மாங்கல்ய தோஷம், களத்ரதோஷம், செவ்வாய் தோஷம் ஆகியவை நிவர்த்தி, முன்னோர் சாபம் உட்பட அனைத்து கிரக தோஷங்களும் விலக சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.