ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அடுத்துள்ள மாரனூர் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளி மாணவர்களுக்கு கல்வியின் அவசியம் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த தலைமையாசிரியர் திலம், உதவி ஆசிரியர் ஜூடு இருதயராஜ் உள்ளிட்டோர் பொம்மலாட்ட நிகழ்ச்சி ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தனர்.
கல்வியின் அவசியத்தை உணரவைத்த பொம்மலாட்டம்!
ஈரோடு: மாரனூர் அரசு நடுநிலைப்பள்ளியில் கல்வியின் அவசியம், புத்தக வாசிப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி நடத்தப்பட்ட பொம்மலாட்ட நிகழ்ச்சியை மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.
பொம்மலாட்ட நிகழ்ச்சி
இதில், மாணவர்கள் கல்வி கற்பதின் அவசியம் குறித்த பொம்மலாட்டம், நூலகம் பற்றிய விழிப்புணர்வு பொம்மலாட்டம், 1 முதல் 6 ம் வகுப்பு வரை உள்ள புதிய பாடப்புத்தகங்களில் இடம்பெற்றுள்ள பாடல்களுக்கு ஏற்றவாறு பொம்மலாட்ட நடனம் மற்றும் உயிரெழுத்து, மெய்யெழுத்து குறித்த பொம்மலாட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொம்மலாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிகளை மாணவ, மாணவியர் உற்சாகத்துடன் கண்டு களித்தனர்.