விவசாயிகளின் பாசனத் தேவைக்காகவும், பொதுமக்களின் குடிநீர்த் தேவைக்காகவும் கடந்த 738 ஆண்டுகளுக்கு முன்னர் 90 கிலோ மீட்டர் தூரம் கட்டப்பட்ட காலிங்கராயன் கால்வாய் பயன்பாட்டிற்கு விடப்பட்ட நாளான தை மாதம் 5ஆம் தேதி ஆண்டுதோறும் காலிங்கராயன் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே ஈரோடு மாவட்டம், பவானி மேட்டுநாசுவம்பாளைத்தில் தொடங்கி, கரூர் மாவட்டம் நொய்யலில் கலக்கும் காலிங்கராயன் கால்வாய் நீரில் சாயம், தோல் கழிவுகள் கலப்பதால், மாசுபட்டு நோய் பரப்பும் நீர் நிலையாக மாறியுள்ளது.
இந்நிலையை மாற்ற விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தியும், போராடியும் வரும் நிலையில் காலிங்கராயன் தினமான இன்று ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் விழிப்புணர்வு மினி மாரத்தான் நடைபெற்றது.