ஈரோடு: கரூர் மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள சாலைப்புதூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், ஈரோடு மாவட்ட விவசாயிகள் மட்டுமின்றி கரூர் மாவட்டத்தில் உள்ள க.பரமத்தி ஒன்றிய விவசாயிகள் மற்றும் கரூர் ஒன்றிய விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.
இங்கு வாரம்தோறும் நடைபெறும் ஏலத்தில் கொப்பரை தேங்காயினை அதிக அளவில் விற்பனைக்குக் கொண்டு வருகின்றனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த எண்ணெய் வியாபாரிகள் மட்டுமின்றி வெளி மாநிலத்தைச்சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கிச்செல்கின்றனர்.
இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 'கொப்பரைத்தேங்காய்' என்று அழைக்கப்படும் தேங்காய் பருப்பு 40.77 குவின்டால் எடைகொண்ட 11,97,000 தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. அவற்றில் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டு ஏல முறையில் விற்பனை நடைபெற்றது. தேங்காய் பருப்பு அதிகபட்சமாக கிலோ ஒன்றுக்கு ரூ. 25.69க்கும், குறைந்தபட்சமாக ரூ.22.15க்கும், சராசரியாக ரூ.22.55 விலைக்கும் ஏலம் சென்றது.
கறுப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ 110.79-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ. 97.49-க்கும், சராசரி விலையாக ரூ.101.99-க்கும் விலை சென்றது. இதேபோல சிவப்பு எள் அதிகபட்ச விலையாக ரூ.112.59க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.94.42க்கும், சராசரி விலையாக ரூ.109.42க்கும் விலை சென்றது.
மொத்தமாக கறுப்பு மற்றும் சிவப்பு எள் மட்டும் ரூ. 26 லட்சத்து 33 ஆயிரத்து 765-க்கு ஏலம் சென்றது. சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் தேங்காய் பருப்பு மற்றும் எள் வகைகள் என மொத்தம் 40 லட்சத்து 63 ஆயிரத்து 906 ரூபாய் மதிப்புள்ள வேளாண் பொருட்கள் ஏலம் சென்றது.
சாலைப்புதூர் அரசு வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 40 லட்சம் வேளாண்பொருட்கள் ஏலம்! - erode
ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே உள்ள சாலைப்புதூர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரம்தோறும் தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு, நிலக்கடலை, எள் ஆகிய பொருட்கள் ஏலம் நடைபெறுகிறது.
சாலைப்புதூர் அரசு வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 40 லட்சம் வேளாண் பொருட்கள் ஏலம்