கடந்த இரண்டு மாதங்களாக வெங்காயம் விலை கிலோ 150 ரூபாயை தொட்டதால் பொதுமக்கள் வீட்டு உபயோகத்திற்கு வெங்காயம் வாங்குவதற்கே யோசிக்கும் நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து வெங்காயம் பயிரிட்டால் நல்ல விலை கிடைக்கும் என்று நினைத்த விவசாயிகள் விதை வெங்காயம் வாங்கி நடவுசெய்தனர். தற்போது ஒரு சில பகுதிகளில் அறுவடை பணிகள் தொடங்கியுள்ளதால் வெங்காயம் விலை மெதுவாக குறையத் தொடங்கியுள்ளது.
கடந்தவாரம் சத்தியமங்கலம் வாரச்சந்தையில் பெரியவெங்காயம் ரூபாய் 60-க்கும், சின்னவெங்காயம் ரூபாய் 70-க்கும் விற்பனையான நிலையில் இன்று நடைபெற்ற வாரச்சந்தையில் பெரிய வெங்காயம் கிலோ ரூபாய் 40-க்கும், சின்னவெங்காயம் ரூபாய் 50-க்கும் விற்பனையானது.