தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி - Robbery at ATM in Erode

ஈரோடு: அந்தியூர் அருகே அடையாளம் தெரியாத நபர்கள் நள்ளிரவில் ஏடிஏம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏடிஏம் இயந்திரத்தை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடிக்க முயற்சி
ஏடிஏம் இயந்திரத்தை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடிக்க முயற்சி

By

Published : Nov 29, 2019, 8:49 PM IST

ஈரோடு மாவட்டம் பிரம்மதேசம் பகுதியில் கனரா வங்கியின் அருகே அதன் ஏடிஎம் உள்ளது. இந்த ஏடிஎம் மையத்துக்குள் நேற்று நள்ளிரவில் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.

ஏடிஎம் இயந்திரத்தின் கீழ் பாகத்தை உடைத்த அவர்கள் உள்ளே உள்ள பாகத்தை உடைக்க முடியாததால் கொள்ளை முயற்சியை கைவிட்டு திரும்பிச் சென்றனர்.

ஏடிஏம் இயந்திரத்தை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடிக்க முயற்சி

இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி வீடியோக்களை வைத்து அந்தியூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சாமி சிலையின் கிரீடத்தை களவாடிய நபர்; சிசிடிவி காட்சி வெளியாகியது!

ABOUT THE AUTHOR

...view details