ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் வாடிக்கையாளர்களின் வசதிக்காக வங்கியின் முன்பாக ஏடிஎம் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தில் பணம் செலுத்தவும் எடுக்கவும் வசதி உள்ளது.
ஏடிஎம்-ஐ உடைத்து கொள்ளை முயற்சி - ஈரோடு
ஈரோடு: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு ஏடிஎம் அறையில் ஹெல்மட் அணிந்தபடி நுழைந்த கொள்ளையன் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து அதில் இருந்த பணத்தை எடுக்க முயன்றுள்ளார். ஆனால் முன்பகுதியை மட்டுமே உடைக்க முடிந்ததால் பணத்தை எடுக்க முடியவில்லை.. இதனிடையே வழக்கம்போல இன்று காலை வங்கிக்கு வந்த ஊழியர்கள் ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சூரம்பட்டி போலீசார் சிசிடிவி காட்சியில் பதிவாகி உள்ள கொள்ளையனின் அடையாளத்தைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.