ஈரோடு: தொடர் மழை காரணமாக தக்காளி செடிகளில் அழுகல் நோய் ஏற்பட்டு விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக தக்காளி வரத்து குறைந்து கிலோ 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனை ஆனது.
தாளவாடி மலைப்பகுதி விவசாயிகளிடமிருந்து தக்காளி கிலோ 85 ரூபாய்க்கு வியாபாரிகள் கொள்முதல்செய்தனர். இந்நிலையில் தக்காளி கொள்முதல் விலை கிலோ 55 ரூபாய் ஆக குறைந்துள்ளது.
தக்காளி கொள்முதல் விலை கிலோ 55 ரூபாய் சரிவு தக்காளி விலை ஏற்றம்
இதன் காரணமாக, சந்தை, கடைகளில் தக்காளி விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி தினசரி சந்தை, வாரச் சந்தைகளில் தக்காளி கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மக்கள் தவிப்பு
தாளவாடி மலைப்பகுதியில் தக்காளி கொள்முதல் விலை குறைந்தும் சந்தை, வாரச் சந்தைகளில் விலை குறையாததால் மக்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
இதையும் படிங்க:வேதா இல்லத்தை ஒப்படைப்பது குறித்து அரசிடம் ஆலோசிக்கப்படும் - சென்னை ஆட்சியர்