ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் மத்திய, மாநில அரசுகளின் நிதிநிலை அறிக்கைகளைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையானது எல்.ஐ.சி, பொதுத்துறை வங்கி உள்ளிட்ட அரசு, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்குத் தாரை வார்க்கும் விதமாக உள்ளதாகவும், வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டங்கள் எதுவும் இல்லாமல் உள்ளதாகவும் பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளின் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். விளைபொருட்களுக்கு இரட்டிப்பு விலை வழங்க வேண்டும். நூறு நாள் வேலை உறுதி திட்டத்திற்கான நிதியை குறைக்கக்கூடாது. நிலுவையில் உள்ள கூலியை உடனடியாக வழங்க வேண்டும்.