ஈரோடு மாநகர குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளராக ரவிச்சந்திரன் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஈரோட்டிலுள்ள காவல் நிலையங்களில் தலைமைக் காவலர், தனிப்பிரிவு தலைமைக் காவலர், காவல் உதவி ஆய்வாளர், குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் என பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார்.
இவருக்கு கடந்த வாரத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர் ஈரோட்டிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடல் நிலை மிகவும் பாதிப்படைந்தது.
இதனைத் தொடர்ந்து அவர் நேற்று முன்தினம் (நவ.7) உடனடியாக கோயம்புத்தூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள கரோனா தீவிர சிகிச்சை தனி வார்டில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து இரண்டு நாட்களாக, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று (நவ.9) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உயிரிழந்த முதல் காவலர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வறுமையால் வெளிநாடு சென்றவர்... கரோனாவால் உயிரிழப்பு!