கோபி வைரவிழா மேல்நிலைப்பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருபவர், மன்சூர் அலி. இவர் 2018ஆம் ஆண்டுக்கான தேசிய ஆசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ கடிதத்தை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை, இவருக்கு அனுப்பியுள்ளது.
27 ஆண்டு ஆசிரியர் பணிக்கு கிடைத்த தேசிய விருது! - விருது
ஈரோடு: 27 ஆண்டுகளாக ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மன்சூர் அலி என்பவருக்கு குடியரசுத் தலைவரின் கைகளால் தேசிய விருது வழங்கப்படவுள்ளது.
award
செப்டம்பர் 5ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் ஆசிரியர் தினவிழாவில் அவருக்கு, குடியரசுத் தலைவரின் கைகளால் விருது வழங்கி ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது. ஓவிய ஆசிரியராக 27 ஆண்டுகள் சிறந்து விளங்கிய இவருக்கு இப்பரிசு வழங்கப்படுகிறது. கோபி கலைக்கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் பயின்று ஓவியக்கலையைக் கற்று ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவரது பணியை பாராட்டி மத்திய அரசு இவருக்கு தேசிய ஆசிரியர் விருது வழங்குகிறது.