தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சட்டவிரோதமாக கர்நாடக மாநில மதுபாட்டில்களை விற்றவர் கைது - erode district news

ஈரோடு: தாளவாடி மலைப்பகுதியில் கர்நாடக மாநில மதுபாட்டில்களை விற்பனை செய்த நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை
சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை

By

Published : Aug 21, 2020, 6:35 PM IST

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் பனகள்ளி கிராமம் உள்ளது. இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகே கர்நாடக மாநில மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக, அப்பகுதி மக்கள் தாளவாடி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், அம்பேத்கர் வீதியிலுள்ள மாதேஷ் என்பவரது வீட்டில் சோதனை செய்தனர்.

சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை

அப்பொழுது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட கர்நாடக மாநில மதுபாட்டில் பெட்டிகளை பறிமுதல் செய்தனர். பின்னர் சட்ட விரோதமாக வெளிமாநில மதுபானங்களை விற்பனை செய்த குற்றத்திற்காக, மாதேஷை கைது செய்தனர். மேலும் தொடர்ச்சியாக இப்பகுதியில் காவல் துறையினர் சோதனை மேற்கொள்ள வேண்டும் என, பொது மக்கள் காவல் துறையினரிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: ரூ. 72 லட்சம் மதிப்பிலான மதுபானங்களை அழித்த காவல் துறை

ABOUT THE AUTHOR

...view details