ஈரோடுஅருகே சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்திபெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் பண்ணாரி அம்மன் கோயிலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் எளிதாக சாமி தரிசனம் செய்ய ஐந்து பேர் பயணம் செய்யும் வகையில் புதியதாக பேட்டரி கார் சேவை தொடங்கி வைக்கப்பட்டது.