தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை! - கணக்கில் வராத பணம் பறிமுதல்

ஊராட்சிக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய திடீர் சோதனையில், கணக்கில் வராத 2 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் பணத்தை லஞ்ச ஒழிப்பு துறையினர் பறிமுதல் செய்தனர்.

anti-corruption-department-raid
anti-corruption-department-raid

By

Published : Oct 30, 2020, 11:59 AM IST

ஈரோடு:ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள ஊராட்சிக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், பயிர் கடன் மற்றும் விவசாய கடன் வழங்க, லஞ்சம் வாங்கப்படுவதாகப் எழுந்த புகாரினைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் துணை காவல் கண்காணிப்பாளர் திவ்யா தலைமையில் திடீர் சோதனை நடத்தினர்.

நேற்று (அக்.29) மதியம் 1 மணிக்குத் தொடங்கிய சோதனை 6 மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. நகை மதிப்பீட்டாளர், செயலாளர், தலைவர் உள்ளிட்டோரிடம் நடந்த விசாரணையில், கணக்கில் வராத 2 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் பணத்தை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடந்த இந்த திடீர் சோதனை அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க :விவசாய நிலத்தில் புகுந்த சிறுத்தை: தீவிர கண்காணிப்பில் வனத்துறை!

ABOUT THE AUTHOR

...view details