ஈரோடு: ஈரோடு கவுந்தப்பாடி சிங்காநல்லூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் கோபிசெட்டிபாளையம் கொலப்பலூரில் உள்ள தனியார் பின்னலாடை நிறுவனத்தில் துணை மேலாளராக வேலை செய்து வந்தார். கிருஷ்ணமூர்த்திக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாகவும், ரம்மி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளாதகவும் கூறப்படுகிறது.
இதனால் சுமார் ரூ.5 லட்சம் பணத்தை இழந்ததால் விரக்தியடைந்த அவர், வீட்டின் அருகே இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.