ஈரோடு: காந்தி பிறந்த நாளான இன்று(அக் 2) கவுந்தப்பாடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காந்தி கோயிலில் அமைச்சர் கே.சி.கருப்பணன் முன்னிலையில் அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி செந்தாம்பாளையத்தில் வையாபுரி என்பவர் 1997 ஆண்டு மகாத்மா காந்திக்கும் அன்னை கஸ்தூரி அம்மையாருக்கும் தனித்தனி சன்னதி அமைத்து மகாத்மா காந்தி கோயிலை கட்டினார்.
இக்கோவிலில் ஆண்டுதோறும், குடியரசு தினம் (ஜன 26), சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15), காந்தி ஜெயந்தி (அக். 2) ஆகிய மூன்று முக்கிய நாளில், காந்திக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். தினந்தோறும் சன்னதியில் பூஜைகள் நடைபெறும்.