தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் அமைந்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் மாவோயிஸ்ட் பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அணைக்கரை வனத்தில் நாட்டுத் துப்பாக்கியுடன் திரிந்த நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் அணைக்கரையைச் சேர்ந்த குமார் (45) என்பதும், வனத்தில் வனவிலங்குகளை வேட்டையாடி அதன் இறைச்சியை கர்நாடகத்தில் விற்பனை செய்ததும் தெரியவந்தது.
நாட்டுத்துப்பாக்கியால் வன விலங்குகளை வேட்டையாடியவர் கைது
ஈரோடு: கடம்பூரில் நாட்டுத்துப்பாக்கியை வைத்து வனவிலங்குகளை வேட்டையாடிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஈரோடு
இதனையடுத்து வன விலங்குளை வேட்டையாடிய குற்றத்துக்காகவும், உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்ததாகவும் குமாரை பிடித்த மாவோயிஸ்ட் பிரிவு போலீசார், கடம்பூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு அவரிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்து காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்த வனத்துறை!