தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆடி 1: அந்தியூர் கால்நடை சந்தையில் ஒரு கோடிக்கு வியாபாரம்! - andhiyur cattle market

இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஆடி 1ஆம் தேதியான நேற்று (ஜூலை.17) நடைபெற்ற அந்தியூர் கால்நடைச் சந்தையில் சுமார் ஒரு கோடி ரூபாய் வரை வியாபாரம் நடைபெற்றதாக சந்தை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

andhiyur-cattle-market-opened-after-two-months
2 மாதங்களுக்குப் பிறகு கூடிய அந்தியூர் கால்நடை சந்தை - ரூ. 1 கோடிவரை வியாபாரம்!

By

Published : Jul 18, 2021, 12:38 PM IST

ஈரோடு:அந்தியூரில் வாரந்தோறும் சனிக்கிழமை கால்நடை சந்தை கூடுவது வழக்கம். அந்தியூர், பவானி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள விவசாயிகள் பசு, எருமை மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

இந்நிலையில், கரோனா தொற்று காரணமாக, இரண்டு மாதங்களுக்குப் பின்னர் திறக்கப்பட்ட மாட்டுச் சந்தையில் நேற்று வியாபாரம் படுஜோராக நடைபெற்றது. பசு, எருமைக் கன்றுகள் என 500க்கும் மேற்பட்ட கால்நடைகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.

பசுமாடு 25 ஆயிரம் ரூபாய் தொடங்கியும், எருமை மாடு 35 ஆயிரம் ரூபாய் தொடங்கியும், பசுக்கன்று ஐந்தாயிரம் ரூபாய் தொடங்கியும் விற்பனையானதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

இரண்டு மாதங்களுக்குப் பின்னர் சந்தை நடைபெற்றதால், ஒரு கோடி ரூாபய் வரை வியாபாரம் நடைபெற்றதாக சந்தை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:பக்ரீத் பண்டிகை: கோபிசெட்டிபாளையம் சந்தையில் செம்மறி ஆடுகள் விற்பனை ஜோர்

ABOUT THE AUTHOR

...view details