தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவிரி விவகாரத்தில் திமுக தான் துரோகம் இழைத்தது - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! - திமுக

ஈரோடு: காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு துரோகம் இழைத்தது திமுக தான் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

Anbumani slams DMK on cauvery issue

By

Published : Apr 15, 2019, 5:49 PM IST

திருப்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எம்.எஸ் ஆனந்தனை ஆதரித்து திருப்பூர் பவானியில் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், திமுகவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே நிர்வாகப் பொறுப்பில் உள்ளனர். திமுக ஆட்சி காலத்தில் தான் கர்நாடகாவில் 5 அணைகள் கட்டப்பட்டன. ஆகையால் காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு துரோகம் இழைத்தது திமுக தான் என குற்றம்சாட்டினார்.

மேலும் 8 வழி சாலை திட்டத்தை பற்றி பேசுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு எவ்வித தகுதியும் கிடையாது. இதில் உரிமை கொண்டாட ஸ்டாலினுக்கு உரிமை கிடையாது எனஅன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details