தமிழ்நாட்டில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு காரணமாக அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. கூலித் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பின்றி அவதிப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் உணவின்றி யாரும் கஷ்டப்படக்கூடாது என்ற அரசின் கொள்கையால் பொதுமுடக்கத்தின் போது அம்மா உணவகம் வழக்கம்போல செயல்பட்டது.
அம்மா உணவகத்துக்கு செல்வோர் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்துச் சென்றனர். அம்மா உணவகத்துக்கு செல்வோரை தடுக்கக்கூடாது என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டதையடுத்து உரிய ஆவணங்கள் காண்பித்து செல்லலாம் என தெரிவிக்கப்பட்டது.