தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தண்ணீரின்றி வாடிய குரங்களுக்கு தர்பூசணி வழங்கிய ஆம்புலன்ஸ் ஊழியர்கள்!

ஈரோடு: சத்தியமங்கலத்தில் தண்ணீரின்றி வாடிய குரங்குகளுக்கு, 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தர்பூசணி பழங்களை வழங்கினர்.

Ambulance staff provide water melon for monkeys

By

Published : May 17, 2019, 2:11 PM IST

தமிழ்நாடு முழுவதும், வெப்பத்தின் தாக்கத்தால் வறட்சி நிலவிவருகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மலைப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறையால், அங்கு வசிக்கும் குரங்குகள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளன.

இதனை சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் செல்லும் சாலையில் அடிக்கடி பயனிக்கும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கர்,ராமன்,ராஜசேகர் ஆகியோர் பார்த்து வருந்தியுள்ளனர்.

ஆம்புலன்ஸ் ஊழியர்

இதையடுத்து அந்த ஊழியர்கள், தங்களால் முடிந்த அளவு தர்பூசணி பழங்களை வாங்கி அந்த குரங்குகளுக்கு கொடுத்துள்ளனர். இவர்களின் இந்தச் செயலை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details