தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் ரேஷன் கடையில் கிடைக்கும்' - செங்கோட்டையன்

ஈரோடு: மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் ரேஷன் கடைகளில் கிடைக்கும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய பொருள்கள் அனைத்தும் ரேஷன் கடையில் -அமைச்சர் செங்கோட்டையன்!
அத்தியாவசிய பொருள்கள் அனைத்தும் ரேஷன் கடையில் -அமைச்சர் செங்கோட்டையன்!

By

Published : May 7, 2020, 6:03 PM IST

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த நபர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனும், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணனும் சேர்ந்து நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், 'ரேசன் கார்டுகள் இல்லாத நபர்களுக்குப் புதிய ரேசன் கார்டுகளும், முதியோர் உதவித் தொகைக்கான சான்றிதழ்களும் தமிழ்நாடு அரசின் விதிப்படி, தற்போது கோபிசெட்டிபாளையம் பகுதியில் சுமார் 370 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தாளவாடி பகுதிகளில் பால் உற்பத்தியாளர் சங்கத்தில் உள்ளவர்களுக்குப் பால் கேன்கள் வழங்கப்பட உள்ளன’ என்றார்.

மேலும், 'ரேஷன் பொருள்கள் உள்பட மக்களுக்குத் தேவையான அனைத்து பொருள்களும் அனைத்து ரேஷன் கடைகளிலும் தற்போது வழங்கப்பட்டு வருகிறது' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க...சைக்கிள் வாங்க வைத்திருந்த பணத்தை நிவாரண நிதியாக அளித்த சிறுவர்கள்!

ABOUT THE AUTHOR

...view details