ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே நஞ்சை ஊத்துக்குளியில், தனியார் மாட்டுத்தீவன ஆலை செயல்பட்டுவருகிறது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர் பணிபுரிகின்றனர்.
இதில், 101 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நஞ்சை ஊத்துக்குளியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டன..
இது குறித்து அப்பகுதியில் உள்ள ஹோட்டல் டீக்கடைகளில் உரிமையாளர்கள் கடைகளைத் திறந்து வியாபாரம் செய்ய அனுமதிக்குமாறு போராட்டம், மறியலில் ஈடுபட்டுவந்தனர் .
தொற்று உறுதிசெய்யப்பட்ட கடைகளை தவிர, பிற கடைகள் இயங்க அனுமதிக்குமாறு அரசிடம் கோரிக்கைவைக்கப்பட்டது.
நஞ்சை ஊத்துக்குளியில் கடைகள் திறப்பு - Nanjai Oothukkuli
ஈரோடு: நஞ்சை ஊத்துக்குளியில் கால்நடைத் தீவன ஆலை, கடைகள் செயல்பட, அப்பகுதி கடை முதலாளிகள், பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டம் மற்றும் மறியல் காரணமாக இன்று முதல் அப்பகுதியில் உள்ள கடைகள் செயல்படத் துவங்கின.
போராட்டம்
இதைத் தொடர்ந்து, மொடக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில், இரு தரப்பினரிடமும் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. வட்டாட்சியர் சங்கர் கணேஷ், ஆர்.டி.ஓ. சைபுதீன், டி.எஸ்.பி. ராஜ் தலைமையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சுமுகத் தீர்வு ஏற்பட்டு இன்றுமுதல் அப்பகுதியில் உள்ள கடைகள் வழக்கம்போல் இயங்கத் தொடங்கின.