தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மது அருந்தும் திமுக பிரமுகர்- வைரலான வீடியோ - மது அருந்தும் அரசியல் பிரமுகர்

ஈரோடு: ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அரசியல் கட்சி பிரமுகர் அமர்ந்து மது அருந்தும் வீடியோ வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது.

மது அருந்தும் அரசியல் பிரமுகர்

By

Published : May 2, 2019, 9:13 PM IST

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ளது செண்பகபுதூர். இந்த ஊரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் நேற்று இரவு சிலர் அமர்ந்து மது அருந்துவதாக அப்பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்தது.

மது அருந்தும் திமுக பிரமுகர்

தகவலின் பேரில் அங்கு சென்ற பார்த்த போது, திமுக பிரமுகர் சதாசிவம் மற்றும் ஊராட்சி அலுவலக உதவியாளர் ராஜேஷ் கன்ணன் ஆகியோர் இருவரும் மது அருந்தி கொண்டிருந்தது தெரியவந்தது. அவர்களை பிடித்து காவல் துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் செண்பகபுதூருக்கு வந்த காவல் துறையினர், இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மதுக்குடித்தவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைதொடர்ந்து, இருதரப்பையும் சமதானம் பேசி காவல் துறையினர் கூட்டத்தை கலைத்தனர். இந்நிலையில் தற்போது மது அருந்திய வீடியோ வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details