ஈரோடு:சசிகலா தற்போது ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் தொண்டர்களிடையே உரையாற்றிய சசிகலா, “பெண் சிசு கொலையை தடுக்க ஜெயலலிதா கொண்டு வந்த திட்டம்தான் தொட்டில் குழந்தை திட்டம். பல்வேறு மக்கள் நல திட்டங்களை கொண்டு வந்தவர் ஜெயலலிதா. இதற்கு மூடுவிழா நடத்த திமுக முடிவு செய்துள்ளது.
15 மாத ஆட்சி்யில் மக்களுக்காக திமுக எதையும் செய்யவில்லை. ஆவின் பால் , சொத்து வரி , மின் கட்டணம் உயர்ந்துள்ளது. . மின் கட்டண உயர்வால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள். திமுக மக்கள் விரோத அரசு. விரைவில் பேருந்து கட்டணத்தையும் உயர்த்த உள்ளனர்.