தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் சசிகலாவிற்கு எதிராக கண்டனம் - Sasikala

ஈரோடு: ஈரோடு புறநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில், சசிகலாவிற்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கருப்பண்ணன் தலைமையில் சசிகலாவுக்கு எதிராக கண்டன தீர்மானம்
முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கருப்பண்ணன் தலைமையில் சசிகலாவுக்கு எதிராக கண்டன தீர்மானம்

By

Published : Jun 20, 2021, 4:01 PM IST

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியில் முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் வீட்டில் அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் மாநில அமைப்புச் செயலாளரும், முன்னாள் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் கே.சி. கருப்பண்ணன் தலைமை தாங்கினர்.

சசிகலாவிற்கு எதிராக கண்டனம்

அப்போது, 'அதிமுகவில் உறுப்பினராக கூட இல்லாத சசிகலா, அதிமுகவை அபகரிக்கும் நோக்கிலும், சாதி உணர்வைத் தூண்டும் விதத்திலும், கட்சி தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக செயல்படுகிறார்’ என சசிகலாவிற்கு ஈரோடு புறநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

'அதிமுகவிற்கும், சசிகலாவிற்கும் எவ்விதத் தொடர்பும், சம்பந்தமும் இல்லை. அதிமுவினர் எவரும் சகிகலாவுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது.

மேலும், திமுக அரசால் நிறுத்தப்பட்ட அத்திகடவு - அவினாசி திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

பவானிசாகர் அணையிலிருந்து ஆகஸ்ட் 15ஆம் தேதி பாசனத்திற்கு நீர் திறக்க வேண்டும்" என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், ஈரோடு - சத்தியமங்கலம் இருவழிச்சாலை திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்க, அரசுக்கு ஆலோசனைக் கூட்டத்தில் மேலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜெயக்குமார், பண்ணாரி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details